தமிழகம்

குழந்தையின்மை பிரச்சனையால் ஏற்பட்ட பிரச்சனை! கணவன் மனைவி அடுத்தடுத்து தற்கொலை! சோக சம்பவம்!

Summary:

husband and wife suicide


சென்னை தி நகர் ராஜாஜி தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் நந்தினி என்ற பெண்ணிற்கும் ஒருவருடத்த்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தநிலையில் இருவரும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகியும், குழந்தை இல்லாததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து  மணிகண்டன் வழக்கம்போல் வேலைக்குப் புறப்பட்டு சென்றுள்ளார். அலுவலகத்திற்கு சென்ற மணிகண்டன் அவரது மனைவிக்கு போன் செய்துள்ளார். ஆனால் நந்தினி அவரது அழைப்பை ஏற்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் பக்கத்து வீட்டுக்காரருக்கு போன் செய்து தனது வீட்டிற்கு சென்று பார்க்க கூறியுள்ளார். அவர், சென்று பார்த்தபோது நந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நந்தினி இறந்த விவகாரம் குறித்து மணிகண்டனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வீடு திரும்பிய மணிகண்டனும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கணவன் மனைவி இருவரும் ஒரே நாளில் அடுத்தடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement