திருமணமாகி ஓராண்டில் ஏற்பட்ட கணவன் மனைவி சண்டை! ஒரே கயிற்றில்முடிந்த திருமண வாழ்க்கை!



husband and wife suicide

கோவை கருமத்தம்பட்டி அருகே கணியூர் ஊராட்சிக்குட்பட்ட பொன்னான்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த கேசவராஜ் என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் கீர்த்திகா என்ற பெண்ணிற்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 

இந்த நிலையில் நேற்று காலை 9 மணி ஆகியும் நீண்ட நேரம் தம்பதியினரின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த கேசவராஜின் பெற்றோர் ஜன்னலை உடைத்து உள்ளே பார்த்த போது, இருவரும் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கியுள்ளனர்.

suicide

இதனைக்கண்ட அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், திருமணம் முடிந்ததில் இருந்தே கணவன்-மனைவிக்கு இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. திருமணம் முடிந்த ஒரு வருடத்திலே இளம்தம்பதி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.