2 பேரும் பார்க்கத்தான் அப்பாவி மாதிரி!! ஆனால் செஞ்ச காரியம் இருக்கே!! கொலை நடுங்கும் சம்பவம்.

2 பேரும் பார்க்கத்தான் அப்பாவி மாதிரி!! ஆனால் செஞ்ச காரியம் இருக்கே!! கொலை நடுங்கும் சம்பவம்.


Husband and wife killed a call taxi driver for money

பணத்திற்காக கால்டாக்சி ஓட்டுனரை விஷ ஊசி போட்டு கொலை செய்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

குறிப்பிட்ட சம்பவமானது கோவை மாவட்டம் வடவள்ளி அருகே நடந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள ஓணாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சனு. தனியார் நிறுவனம் ஒன்றில் கால்டாக்சி ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சமீபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து, அவரது உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திவந்த போலீசார், தொண்டாமுத்தூரைச் சேர்ந்த ஸ்டீபன் மற்றும் அவரது மனைவி அமலோற்பவம் என்பவர்களை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பணத்திற்காக அவர்கள் சனுவை கொலை செய்ததாக கூறியுள்ளனர்.

மர தடியால் அவரை அடித்தும், விஷ ஊசி போட்டும் கொலை செய்ததாக தம்பதியினர் போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இருவரையும் கைது செய்து சிறையில் அடைந்துள்ள போலீசார் கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதம், 6100 ரூபாய் பணம், லேப்டாப், 20 க்கும் மேற்பட்ட செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்ததோடு, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.