கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார்! சோகத்தில் மூழ்கிய கிராமம்!

கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார்! சோகத்தில் மூழ்கிய கிராமம்!


husband and wife died same date


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இருந்து அரிமளம் செல்லும் வழியில் உள்ளது குப்பகுடி என்ற கிராமம். அந்த கிராமத்தை சேர்ந்த 104 வயது நிரம்பிய வெற்றிவேல் என்பவருக்கு 100 வயதுடைய பிச்சாயி என்ற  மனைவி இருந்துள்ளார். விவசாயியி குடும்பத்தை சேர்ந்த வெற்றிவேலுக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.            

death

இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக வெற்றிவேல் இன்று காலை உயிரிழந்தார். வெற்றிவேல் இறந்ததும் அவரது குடும்பத்தினர் அவருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். இந்தநிலையில் தனது கணவன் இறந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் அவரது மனைவி பிச்சாயி. 

இணைபிரியாத ஜோடி ஒரேநாளில் மரணமடைந்ததையடுத்து அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செய்து வருகின்றனர்.