அடக்கடவுளே ஒரு பிரியாணிக்காக இப்படியா.! பரிதாபமாக பறிபோன இரு உயிர்கள்.! நடந்தது என்ன? அதிரவைக்கும் பகீர் சம்பவம்!

அடக்கடவுளே ஒரு பிரியாணிக்காக இப்படியா.! பரிதாபமாக பறிபோன இரு உயிர்கள்.! நடந்தது என்ன? அதிரவைக்கும் பகீர் சம்பவம்!


husband-and-wife-dead-for-briyani-in-chennai

சென்னை அயனாவரம் தாகூர் நகரில் வசித்து வந்தவர் கருணாகரன். 75 வயது நிறைந்த இவர் ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி சென்னையிலேயே தனிதனியாக தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கருணாகரன் மற்றும் பத்மாவதி மட்டும் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டது போல நடந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு கருணாகரன் பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டு கடைக்கு சென்று  வாங்கி வந்து தனியாக சாப்பிட்டுள்ளார் அப்பொழுது அதனைக் கண்ட மனைவி பத்மாவதி தனக்கும் பிரியாணி வேண்டும். கொஞ்சம் கொடுங்கள் என ஆசையாக கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

dead

இந்த நிலையில் ஆத்திரமடைந்த கருணாகரன் மனைவி என கூட பாராமல் திடீரென பத்மாவதி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். தீ பற்றி எரிந்த பத்மாவதி எரிச்சல் தாங்க முடியாமல் அலறியுள்ளார். மேலும் ஓடி சென்று தனது கணவரை கட்டிப்பிடித்துள்ளார். இந்த நிலையில் கருணாகரன் மீதும் தீ பற்றி எரிய துவங்கியது.

இந்த நிலையில் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பத்மாவதி உயிரிழந்தார். மேலும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாகரனும் இன்று காலை உயிரிழந்துள்ளார். இதற்கிடையில் நடந்தது குறித்து கருணாகரன் வாக்குமூலம் அளித்துள்ளார். பிரியாணியால் கணவர் மற்றும் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.