தமிழகம்

பூட்டிய வீட்டில் சடலமாக தூக்கில் தொங்கிய தம்பதியினர்! அருகே உயிரிழந்து கிடந்த மற்றொரு நபர்! வெளியான பகீர் காரணம்!

Summary:

husband and wife commits suicide for dept torture

வியாசர்பாடி அருகே ராஜீவ் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கரிகாலன். இவர் மீன்வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் இவர் சமீபகாலமாக  உடல்நிலை சரியில்லாதநிலையில் வீட்டிலேயே இருந்தார். இவரது மனைவி முனியம்மாள். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட ஆறுமுகம் என்ற அண்ணன் உள்ளார். ஆறுமுகமும் அவர்களுடனே வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கரிகாலனுக்கு ஹரிகிருஷ்ணன் என்ற மகனும், குணவதி என்ற மகளும் உள்ளனர். குணவதிக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்திற்காக கரிகாலன் தனது வீட்டை அடமானம் வைத்து 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்களது மகன் ஹரிஹரன் வீட்டை விட்டு வெளியேறினார். 

இந்நிலையில் பணத்தை கட்ட முடியாமல் தவித்துவந்த கரிகாலன் 10 நாட்களுக்கு முன் வீட்டை விற்று கடனை அடைத்துள்ளார். இதனை தொடர்ந்து வீட்டை காலி செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதால் கரிகாலன், முனியம்மாள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். மேலும் முனியம்மாளின் சகோதரரான ஆறுமுகமும் உணவில் விஷம் கலந்துகொடுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் மூவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியது. மேலும்  இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement