கட்டிடத்தை இடிக்கும்போது கிடைச்ச தங்கம்..! அரைகிலோ தங்கத்தை பாதி விலைக்கு வாங்கிய சென்னை வியாபாரி..! கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி..!

கட்டிடத்தை இடிக்கும்போது கிடைச்ச தங்கம்..! அரைகிலோ தங்கத்தை பாதி விலைக்கு வாங்கிய சென்னை வியாபாரி..! கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி..!



Husband and wife cheated chennai man using fake gold

தங்கக்கட்டி என நினைத்து ஆசையாக பாதி விலைக்கு வாங்கியவருக்கு அது போலி தங்கம் என்பது தெரியவந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை நீலாங்கரை வைத்தியலிங்கம் சாலை 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பொன்னுரங்கம். சோலுங்கநல்லூரில் ஆயில் கடை நடத்திவரும் இவருக்கு கட்டிட வேலை செய்துவரும் வெங்கடேசன் என்பவர் அடிக்கடி ஆயில் வாங்க வருவதன் மூலம் பழக்கமாகியுள்ளார்.

இந்நிலையியல் ஒருநாள் பொன்னுரங்கத்தின் கடைக்குவந்த வெங்கடேசன், ஊரடங்கு என்பதால் சரியான வேலை, வருமானம் இல்லை எனவும், திருச்சியில் ஒரு கட்டிட வேலை பார்த்தபோது அங்கு இடிக்கப்பட்ட கட்டிடத்தில் இருந்து தனக்கு ஒரு தங்க கட்டி கிடைத்ததாகவும், அந்த தங்கக்கட்டியை விற்றுத்தருமாறும் பொன்னுரங்கத்திடம் கூறியுள்ளார்.

அதற்கு பொன்னுரங்கமும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஒருநாள் தங்கக்கட்டியை எடுத்துவந்த வெங்கடேசன் அதை பொன்னுரங்கத்தின் கடையில் வைத்து எடைபோட்டபோது 450 கிராம் இருந்துள்ளது. கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்கலாம், ஆனால் தற்போது உள்ள வறுமை, சூழ்நிலை காரணமாக 5 லட்சம் கிடைத்தால்கூட போதும் என வெங்கடேசன் பொன்னுரங்கத்திடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பி அந்த தங்க கட்டியை தானே வாங்கிக்கொள்வதாக பொன்னுரங்கம் வெங்கடேசனிடம் கூறி அதற்காக முன்பணமாக 3 லட்சமும் ரூபாயை வெங்கடேசன் மற்றும் அவரது மனைவியிடம் கொடுத்துள்ளார் பொன்னுரங்கம்.

இதனை அடுத்து கடந்த மார்ச் மாதம் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார் பொன்னுரங்கம். அங்கு சென்றவர் தங்கக்கட்டியையும் உடன் எடுத்து சென்றநிலையில், அங்குள்ள நகை கடை ஒன்றில் தங்கத்தை சோதனை செய்துள்ளார். அப்போதுதான் அது தங்கக்கட்டி இல்லை என்றும், தங்க முலாம் பூசிய பித்தளை என்றும் தெரியவந்தது.

பதறிப்போய் வெங்கடேசனுக்கு பொன்னுரங்கம் போன் செய்துள்ளார். ஆனால், வெங்கடேசனின் போன் ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது. ஊரடங்கு என்பதால் அவரால் உடனே சென்னைக்கு வர முடியவில்லை. இதனை அடுத்து சில நாட்களுக்கு முன்னர் சென்னைக்கு வந்த பொன்னுரங்கம் தான் ஏமாற்றப்பட்டது குறித்து வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி மீது செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.