புத்தாண்டன்று வேறொரு ஆணுடன் உல்லாசமாக இருந்த காதல் மனைவி, நேரில் கண்ட கணவர் எடுத்த விபரீத முடிவு!

கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் வசித்து வந்தவர் மாரிமுத்து. இவர் ஆட்டோ ஓட்டுநரான பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விமலா.இவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு இரு பெண்குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் மாரிமுத்து தான் குடியிருந்த வாடகை வீட்டை காலி செய்து விட்டு, சொந்தமாக கட்டியுள்ள புதிய வீட்டிற்கு நேற்று குடிபெயர்ந்தனர்.
அப்பொழுது பழைய வீட்டில் இருந்து பொருட்களை புது வீட்டிற்கு மாற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது இரவில் அனைவரும் புதிய வீட்டில் உறங்கினர்.
அப்பொழுது அதிகாலை குழந்தை அழும் சத்தம் கேட்டு மாரிமுத்து எழுந்து பார்த்துள்ளார். அப்பொழுது தனது மனைவி விமலா வீட்டில் இல்லாதநிலையில் பழைய வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துவரச் சென்று இருக்கலாம் என்று நினைத்த மாரிமுத்து அங்கு சென்றுள்ளார். ஆனால் அங்குவிமலா வேறொரு நபருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதைக்கண்டு கோபமடைந்த மாரிமுத்து, அருகில் இருந்த இரும்புக் கம்பியால் விமலாவை சரமாரியாக தாக்கியுள்ளார். தலையில் பலமாக அடிபட்டத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்த விமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விமலாவுடன் இருந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட மாரிமுத்து, குழந்தைகளை தனது தாயிடம் ஒப்படைத்து விட்டு காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.