13 வருட காதல்.! நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் பார்த்தீங்களா!!
பிச்சை எடுப்பவர்களை ஒழிக்க அருமையான யோசனை! இதனை நாமும் கடைபிடிக்கலாமே!

பிச்சைக்காரர்களுக்கு நாம் உணவும் தண்ணீரும் மட்டும் தான் தரவேண்டும், பணமாக ஒரு ரூபாய் கூட தரக்கூடாது என்று அனைவரும் முடிவெடுத்தால் அணைத்து ஊர்களிலும் பிச்சை எடுப்பவர்கள் ஒழிந்துவிடுவார்கள் என கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
தற்போது பொது இடங்களில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. சிலர் இதனை தொழிலாகவே செய்துவருகின்றனர். அதற்கு முக்கிய காரணமும் பொதுமக்களாகிய நாம் தான் காரணம் என கூறுகின்றனர் தன்னார்வலர்கள்.
தற்போதைய வாழ்க்கைமுறையில் கை கால்களை இழந்தவர்கள் கூட, உழைத்து சம்பாதிக்கின்றனர். ஆனால் உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பவர்கள் பலரே பிச்சையெடுத்து வருகின்றனர். சிலர் குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்களை வைத்து பிச்சை எடுக்கின்றனர்.
இந்தநிலையில் மும்பையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகாம்கள் நடத்துகின்றனர். அதில் "எந்த பிச்சைக்காரர்களுக்கும் உணவு, உடை, தண்ணீர் தவிர பணம் எதுவும் தர மாட்டேன்" என்ற உறுதிமொழியை ஏற்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.
இதனால் பிச்சைக்காரர்களை வைத்து தொழில் நடத்தி, பணம் சம்பாதிப்பதும், குழந்தை கடத்தல் போன்ற குற்றச் செயல்களும் குறையும். குழந்தைகளை கடத்தி ஊனப்படுத்தி, பிச்சை எடுக்க வைத்து பணம் சம்பாதிக்கும் கும்பலை ஒழிக்க இதுவே வழி என முடிவு செய்துள்ளனர். இதனை அனைவரும் ஏற்று அமல்படுத்தினால் தமிழ்நாட்டிலும் பிச்சை, ஏமாற்று, திருட்டு போன்றவை ஒழியும் என கூறுகின்றனர் தன்னார்வலர்கள். இதனை அனைவருக்கும் பகிர்ந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.