அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
உபி-யில் அதிர்ச்சி... மாணவியின் குளியலறையில் ரகசிய கேமரா... அந்தரங்க காட்சிகளை பதிவு செய்த ஹவுஸ் ஓனர்.!!
உத்திர பிரதேச மாநிலத்தில் ஐஏஎஸ் தேர்விற்கு தயாராகி வந்த மாணவியின் வீட்டு குளியலறை மற்றும் படுக்கையறையில் கேமராக்கள் வைத்து ரகசியமாக படம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்தப் பெண் வாடகைக்கு இருந்த வீட்டின் உரிமையாளரை கைது செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐஏஎஸ் தேர்விற்கு தயாராகும் மாணவி
உத்திர பிரதேச மாநிலம் ஷகர்பூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் ஐஏஎஸ் தேர்விற்கு தயாராகி வந்தார். இந்நிலையில் அவர் படிப்பதற்காக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கிறார். மேலும் அந்த மாணவி தனது சொந்த ஊருக்கு செல்லும்போது வீட்டின் சாவியை அதன் உரிமையாளரான கரன் என்பவரிடம் கொடுத்து சென்று இருக்கிறார்.
வீட்டில் பொருத்தப்பட்ட ரகசிய கேமராக்கள்
இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வீட்டின் உரிமையாளர் கரன் இந்தப் பெண் குடியிருந்த வீட்டின் படுக்கையறை மற்றும் குளியலறை உள்ளிட்ட இடங்களில் சிறிய அளவிலான 3 ரகசிய கேமராக்களை பொருத்தி அந்த மாணவியின் அந்தரங்க வீடியோக்களை பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ பதிவுகள் கேமராவில் இணைக்கப்பட்டிருந்த மெமரி கார்டில் பதிவாகி இருக்கிறது.
இதையும் படிங்க: சொட்ட சொட்ட இரத்தம்... 10:மாத குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.!! இளைஞர் கைது.!!
உரிமையாளர் மீது சந்தேகம்
இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் கரண் கேமராவில் பொருத்தப்பட்டிருந்த மெமரி கார்டை எடுக்க முயற்சி செய்து இருக்கிறார். இந்த நேரத்தில் மாணவி அவரது சொந்த ஊருக்கு செல்லாததால் அதனை எடுப்பது கரணுக்கு சிரமமாக இருந்திருக்கிறது. மேலும் அந்த நபர் மாணவியின் வீட்டில் உள்ள குளியலறையில் பொருத்தப்பட்டிருக்கும் மின் சாதனங்களை பழுது பார்க்க வேண்டும் என அனுமதி கேட்டு இருக்கிறார். இது மாணவிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து வீட்டின் குளியலறையை மாணவி சோதனை செய்த போது அங்கிருந்த பல்பு ஹோல்டரில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி இது தொடர்பாக காவல்துறையில் புகார் செய்தார்.
ஹவுஸ் ஓனரை கைது செய்த காவல்துறை
இதனைத் தொடர்ந்து மாணவி வாடகைக்கு இருந்த வீட்டை சோதனை செய்த காவல்துறையினர் அவரது வீட்டின் படுக்கையறை மற்றும் குளியலறை ஆகியவற்றில் 3 ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து மாணவியின் ஹவுஸ் ஓனர் கரன் என்பவரை கைது செய்துள்ள காவல் துறை அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கௌரவ கொலை... தாய், சகோதரர்கள் நிகழ்த்திய கொடூரம்.!!