மொத்த குடும்பமும் வெள்ளத்தில் உயிரிழந்தனர்! ஆனால் 10 மாத பெண் குழந்தை மட்டும் உயிர் பிழைத்த அதிசயம்! அதுவும் எப்படி தெரியுமா?..



himachal-pradesh-heavy-rain-flood-baby-rescue

இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தொடங்கியதையடுத்து, கடந்த சில நாட்களாகவே கனமழை இடைவிடாத வகையில் பெய்து வருகிறது. குறிப்பாக சிம்லா, மண்டி போன்ற பாறை மலை பகுதிகளில் நீர்வளமே அதிகமாகியுள்ளது. இதன் விளைவாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடங்கி வருகிறது.

இதை தொடர்ந்த மழையின் தாக்கமாக 77 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், 37 பேர் காணாமல் போய்யுள்ளனர். அவர்களை கண்டறியும் பணியில் மீட்புப் படைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. காணாமல் போனவர்களில் சிலர் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சிம்லா நகரத்தில் வசித்து வந்த ரமேஷ் (31), அவரது மனைவி ராதா (24) மற்றும் தாயார் பூர்ணா (59) ஆகியோர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். இவர்களுடன் வசித்து வந்த 10 மாத குழந்தை நிகிதா, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

இதையும் படிங்க: மகன் அம்மா வீட்டில்! கழுத்து, மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் சுமார் 20 முறை! துடிதுடித்த தாய்! பார்த்து ரசித்த காதல் கணவர்! பகீர் சம்பவம்....

போலீசாரின் துணிச்சலான நடவடிக்கையால் குழந்தை மீட்பு

அந்தக் குழந்தையை பக்கத்து வீட்டாரின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்டனர். இந்த செயல்பாட்டில் பால்வந்த் என்ற போலீஸ் அதிகாரி தனது உயிரை தியாகம் செய்யத் தயார் நிலையில் இருந்து, அந்தக் குழந்தையை காப்பாற்றியுள்ளார். அவரின் துணிச்சலுக்கு சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பாராட்டுகள் குவிகின்றன.

 

இதையும் படிங்க: அந்தஸ்துக்காக சிங்கத்தை செல்லப்பிராணியாக வீட்டில் வளர்க்கும் பணக்காரர்கள்! பஞ்சாபில் மட்டும் 584 சிங்கம், புலி, சிறுத்தைகள்..‌.. வைரலாகும் வீடியோக்கள்!