கரூர்: குலதெய்வ கோவில் வழிபாட்டிற்கு சென்று வந்த 4 பேருக்கு நேர்ந்த துயரம்.!

கரூர்: குலதெய்வ கோவில் வழிபாட்டிற்கு சென்று வந்த 4 பேருக்கு நேர்ந்த துயரம்.!



heavy-vehicles-collided-near-karur-costs-the-life-of-4

கோவை மாவட்டத்திலிருந்து குலதெய்வ கோவிலுக்கு  வழிபடுவதற்காக சென்று திரும்பி எப்போது ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியைச் சார்ந்த கமல் இருதயராஜ் என்பவரது குடும்பத்தினரும் பொள்ளாச்சியைச் சார்ந்த செக்ஃபோன்சன் என்பவரது குடும்பத்தினர் உட்பட 10 பேர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அவர்களது குலதெய்வ கோவிலுக்கு சிறிய ரக சரக்கு வாகனம் ஒன்றில் சென்றுள்ளனர்.

tamilnadu

இவர்கள் தங்களது வழிபாட்டை முடித்துவிட்டு இன்று காலை கோவைக்கு திரும்பி கொண்டு இருந்தபோது கரூர் மாவட்டம் தென்னிலை அருகே கோவையில் இருந்து திருச்சிக்கு தார் ஏற்றி வந்த மற்றொரு கனரக வாகனத்துடன்  இவர்கள் சென்ற வாகனம் உயிருக்கு நேர் மோதியது . இந்த பயங்கர விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் காயமடைந்தவர்கள் கரூர் அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த மற்றொரு நபர் பலியாகி உள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. .முதற்கட்ட விசாரணையில் கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கமல் இருதயராஜ் மனைவி முத்துலட்சுமி (வயது 38), பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த செக்ஃபோன்சன் மனைவி நதியா (வயது 37) உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் குழந்தைகள் உட்பட ஏழு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறை இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.