அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
நள்ளிரவில் இடி மின்னலுடன் கொட்டி தீர்க்கும் கனமழை! அதிர்ச்சியில் சென்னை மக்கள்!
சென்னையில் இன்று திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. சென்னை அடையாறு, கிண்டி, வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவக் காற்று முடிவடைந்த நிலையில் இன்று முதல் இருந்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதன்காரணமாக இரண்டு தினங்களுக்கு முன்பு தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவு கனமழை பெய்ததால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தனர் மாவட்ட ஆட்சியர்கள். இந்தநிலையில் நேற்று இரவு சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது.
சென்னையில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.வெளுத்துவாங்கும் இந்தமழையால் பொதுமக்கள் சற்று அதிர்ச்சியடைந்தனர். இந்தமழை விடிய விடிய நீடித்தால் அலுவலகம் செல்வர்களுக்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் சிரமமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.