தமிழகம்

அதிகாலையில் இருந்து கொட்டிதீற்கும் கனமழை.! வாகன ஓட்டிகள் கடும் அவதி.!

Summary:

சென்னையில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலையில் இருந்து சண்னனையில் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில், இன்று அதிகாலை 6 மணியில் இருந்து தொடர்ந்து விடாது மழை பெய்து வருகிறது. இந்த மழையானது காலை 10 மணி வரை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் கோயம்பேடு, எழும்பூர், கோடம்பாக்கம், தி.நகர். சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, கிண்டி, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட  பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் அதிகாலையில் இருந்து மழை பெய்துவருவதால் பல இடங்களில் சாலைகளில் நீர் நிரம்பி ஓடுகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் காலையில் பணிக்கு செல்வோர் கடும் அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


Advertisement