தமிழகத்தில் பொளக்கப்போகும் கனமழை.. 25 மாவட்டங்களுக்கு அலர்ட்.. லிஸ்ட் இதோ.!



Heavy Rain Alert: 25 Districts on Warning, Severe Rain Alert for 7 Districts

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழையும், 18 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி இருப்பதால் பல மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்றைய வானிலையை பொறுத்தவரையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இன்றைய வானிலை (Weather Today):

நீலகிரி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், கடலூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 

இதையும் படிங்க: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. மக்களே உஷார்.!

நாளைய வானிலை

நாளைய வானிலை (Tomorrow Weather):

நாளை தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, தர்மபுரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

சென்னை வானிலை (Chennai Weather): 

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இன்றும், நாளையும் விளாசப்போகும் கனமழை.. 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!