50 லட்சம் இன்சூரன்ஸ் எடுத்த 5 நாளில் மாரடைப்பால் இறந்த மனைவி! தில்லாலங்கடி வேலை பார்த்த எச்டிஎஃப்சி-க்கு நுகர்வோர் நீதிமன்றம் கொடுத்த ஷாக் ட்ரீட்மென்ட்..!!!
விசாகப்பட்டினத்தை சேர்ந்த குடும்பம் ஒன்றின் காப்பீட்டு கோரிக்கை விவகாரத்தில் முக்கிய தீர்ப்பை நுகர்வோர் ஆணையம் வழங்கியுள்ளது. காப்பீடு எடுத்த சில நாட்களிலேயே உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு, மறுக்கப்பட்டிருந்த காப்பீட்டுத் தொகையை வட்டியுடன் வழங்குமாறு எச்டிஎஃப்சி லைஃப் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காப்பீடு எடுத்த 5 நாட்களில் திடீர் மரணம்
விசாகப்பட்டினத்தில் வசித்து வந்த 53 வயதான சவரா ராதா, கடந்த மார்ச் 10, 2025 அன்று எச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் ப்ரொடெக்ட் பிளான் திட்டத்தின் கீழ் 50 லட்சம் ரூபாய்க்கான காப்பீட்டை பெற்றிருந்தார். இதற்காக ஆண்டுதோறும் 50 ஆயிரம் ரூபாய் பிரீமியமும் செலுத்தப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: மனைவியையை வைத்து பேரம் பேசிய கணவன்! ஒரு இரவுக்கே 30 லட்சம்.... அது பத்தாது! அண்டை வீட்டாரால் நடந்த அட்டூழியம்..!!!
ஆனால் பாலிசி பெற்ற வெறும் ஐந்து நாட்களிலேயே, மார்ச் 15 அன்று வீட்டில் இருந்தபோது ராதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவ உதவி கிடைக்கும் முன்பே அவர் உயிரிழந்தார்.
கோரிக்கையை நிராகரித்த காப்பீட்டு நிறுவனம்
மனைவியின் மரணத்துக்குப் பிறகு, அவரது கணவர் சவரா பாஸ்கர் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி விண்ணப்பித்தார். ஆனால் பாலிசி விண்ணப்பத்தில் தவறான தகவல்கள் வழங்கப்பட்டதாகக் கூறிய எச்டிஎஃப்சி லைஃப் நிறுவனம், பாலிசியை ரத்து செய்வதாக தெரிவித்து கோரிக்கையை நிராகரித்தது.
இதனால் அதிருப்தியடைந்த பாஸ்கர், நிறுவனத்தின் நடவடிக்கையை எதிர்த்து நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகினார்.
நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த விசாகப்பட்டினம் நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் டாக்டர் குட்லா தனுஜா மற்றும் உறுப்பினர் வர்ரி கிருஷ்ணா மூர்த்தி அடங்கிய அமர்வு, உரிய ஆதாரங்கள் இன்றி விலக்கு பிரிவுகளை சுட்டிக்காட்டி காப்பீட்டு பொறுப்பில் இருந்து தப்ப முடியாது என்று தெரிவித்தது.
இதையடுத்து, பாலிசி மதிப்பான 50 லட்சம் ரூபாயை 6 சதவீத வட்டியுடன் வழங்குமாறு ஆணையம் உத்தரவிட்டது. மேலும், மன உளைச்சலுக்காக 25 ஆயிரம் ரூபாயும், வழக்குச் செலவுக்காக 5 ஆயிரம் ரூபாயும் சேர்த்து வழங்க வேண்டும் என்று எச்டிஎஃப்சி லைஃப் நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 5 நிமிட வீடியோ காலால் நடந்த அவசர திருமணம்! அதற்கு 37 லட்சம் செலவு.....ஆனால் திருமணமான 9 நாளில் நடந்த பெரிய ட்விஸ்ட்! பகீர் பின்னணி..!!!