அதிமுக ஆட்சியில் உறுதி செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனங்கள் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு.!



HC On District Education Officer Job filling Method 

 

கடந்த 2020 டிஎன்பிஎஸ்சி சார்பில், தமிழ்நாடு முழுவதும் காலியாக இருந்த 18 மாவட்ட கல்வி அலுவலருக்கான பணித்தேர்வில், 4 பணியிடங்கள் ஆசிரியராக பணியாற்றியவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, பிற 14 பணிக்கான வாய்ப்புகள் பொதுப்பிரிவினருக்கு வழங்கப்பட்டது. 

இதற்கான எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வுகளில் இனசுழற்சி முறைகளை பின்பற்றி உரிய ஒதுக்கீடு வழங்காமல், அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட நபர்களுக்கு வாஜிபுகள் மறுக்கப்பட்டு ஆசிரியர் தேர்வர்களுக்கு அவை வழங்கப்பட்டுள்ளன. 

இதனால் உரிய இனசுழற்சி முறையை பின்பற்றி பட்டியலை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நிர்மல் குமார் உட்பட 5 பேரின் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் 2020ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனத்தை ரத்து செய்தனர். 

வரும் 4 வாரங்களுக்குள் உரிய இடஒதுக்கீடு முறைகளை பின்பற்றி புதிய பட்டியலை அரசு வெளியிட வவேண்டும் வேண்டும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.