கணவனின் கண்ணெதிரே உல்லாசம்... கூலிப்படையை ஏவி போட்டு தள்ளிய பகீர் சம்பவம்...!

கணவனின் கண்ணெதிரே உல்லாசம்... கூலிப்படையை ஏவி போட்டு தள்ளிய பகீர் சம்பவம்...!


Having fun in front of her husband... The incident of Bagheer pushing the mercenary with AV...

இந்து மக்கள் கட்சி நிர்வாகி, கள்ளக்காதல் விவகாரத்தில் கூலிப்படையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன் (44). இந்து மக்கள் கட்சியில் மதுரை தென்மாவட்ட  துணைச் செயலாளராக இருந்து வந்தார். மேலும் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீடு திரும்பிய மணிகண்டனை மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது. 

இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அப்பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவியையும்  ஆய்வு செய்தனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கூலிப்படை ஏவி மணிகண்டன் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக  ஏட்டு ஹரிஹரபாபு மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏட்டு ஹரிஹரபாபுவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

காவல்துறையினர் இந்த கொலை தொடர்பாக கூறுகையில்;-
மணிகண்டனின் நகைக்கடைக்கு சில மாதங்களுக்கு முன், ஜெய்ஹிந்த்புரம் காவலர் ஏட்டு ஹரிஹரபாபு மனைவியுடன் சென்று நகை  வாங்கியுள்ளார். அப்போது, ஹரிபாபுவின் மனைவிக்கும் மணிகண்டனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

ஏட்டு ஹரிஹரபாபு வேலைக்கு சென்ற நேரத்தில் மணிகண்டன் அவரது மனைவியுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதேபோல, ஒரு நாள் மனைவியுடன் மணிகண்டன் தனிமையில் இருந்ததை பார்த்த ஏட்டு ஹரிபாபு ஆத்திரமடைந்து கூலிப்படையை ஏவி மணிகண்டனை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.