இந்திய கிரிக்கெட் வீரை சோகத்தில் ஆழ்த்திய சாத்தான்குளம் விவகாரம்! களத்தில் இறங்கிய ஹர்பஜன் சிங்!

இந்திய கிரிக்கெட் வீரை சோகத்தில் ஆழ்த்திய சாத்தான்குளம் விவகாரம்! களத்தில் இறங்கிய ஹர்பஜன் சிங்!



harpajan sing talk about sathankulam issue

கடந்த 19ஆம் தேதி ஊரடங்கை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள், திடீரென அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

அப்பாவிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த சாத்தான்குளம் சம்பவம் இந்தியாவையே புரட்டிப் போட்டுள்ளது. டீக்கடை தொடங்கி, டிக்டாக் வரை ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி வேண்டும் என்பதே விவாதப்பொருளாக மாறியுள்ளது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் கொடூரமாக தாக்கப்பட்டு ஏற்பட்ட உயிரிழப்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கிரிக்கெட் வீரர்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார். 


அவரது ட்விட்டர் பதிவில், அடிப்பவனுக்கு தேவை ஆயுதம். வலிப்பவருக்கு தேவை காரணம். இனத்துக்காக, மதத்துக்காக, நிறத்துக்காகன்னு போய், இப்போ எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் மகனும். கடந்து செல்வது எளிதல்ல, நீதி கிடைக்காமல் மறந்து செல்வது மனிதமல்ல. மனிதம் எங்கே?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் #JusticeforJayarajAndFenixஎன்ற ஹேஸ்டேக்கையும் அவர் குறிப்பிட்டுள்ளார்