தமிழகம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!

Summary:

அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து பள்ளிகளும் கடந்த மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. தமிழ் நாட்டில் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வருவதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.  

கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பாடத்திட்டங்கள் ஒன்பதாம் வகுப்பு வரை 50 சதவீதமும், 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு 35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


Advertisement