13 வருட காதல்.! நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் பார்த்தீங்களா!!
#BigNews: இல்லத்தரசிகள், பட்ஜெட் சமையல் ராணிகளுக்கு உச்சகட்ட ஆப்பு.. சீரகம் கிலோ ரூ.700/- பருப்பு வகைகள் விலை கிடுகிடு உயர்வு.! விபரம் உள்ளே.!

இந்தியாவில் உச்சம்பெற தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக, பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி உட்பட அத்தியாவசிய காய்கறிகளின் வரத்து பாதிக்கப்பட்டு விலை உயர்ந்துள்ளது.
பல மாநிலங்களில் தக்காளியின் விலை ரூ.120 ஐ கடந்துள்ளது. சென்னையில் சில்லறை தக்காளியின் விலை கிலோ ரூ.140 வரை சென்றுவிட்டது. இதற்கிடையில், மளிகை பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
அதாவது ரூ.300 க்கு விற்பனை செய்யப்பட்டு இருந்த சீரகம் ரூ.700 க்கும், ரூ.120 க்கு விற்பனை செய்யப்பட்ட துவரம் பருப்பு ரூ.160 க்கும், உளுந்தம்பருக்குபு ரூ.150 க்கும் என விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், சீரகம் ரூ.400 விழா உயர்ந்துள்ளது.
துவரம் பருப்பு, புளி,உளுந்தம்பருப்பு ரூ.40 முதல் ரூ.50 வரை உயர்ந்ந்துள்ளது. கொண்டைக்கடலை ரூ.25 உயர்ந்து கிலோ ரூ.145 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, இஞ்சி ரூ.100 உயர்ந்து கிலோ ரூ.300 க்கும், பூண்டு ரூ.70 உயர்ந்து கிலோ ரூ.150 க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.50 உயர்ந்து ரூ.130 க்கும், பச்சை மிளகாய் ரூ.45 கிலோவுக்கு உயர்ந்து ரூ.100 க்கு விற்பனை செய்யப்படுகிறது.