மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவால் உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள் , அப்படி என்னதான் நடந்துச்சுனு தெரியுமா ?

மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவால் உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள் , அப்படி என்னதான் நடந்துச்சுனு தெரியுமா ?



greenway work stop announced by central government

சென்னை - சேலம் இடையேயான பசுமைவழிச்சாலை திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும் அதை பொருட்படுத்தாத அரசு சாலைக்கான நிலம் கையகப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. இதனை எதிர்த்து மக்கள் பலர் நீதிமன்றங்களை நாடினர். 
 
இதனையடுத்து சமீபத்தில் சென்னை - சேலம் 8 வழிச்சாலை 6 வழிச்சாலையே அமைக்கப்பட உள்ளதாகவும், தேவைப்பட்டால் எதிர்காலத்தில் அந்த சாலை 8 வழிச்சாலையாக மேம்படுத்தப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருந்தது. இருப்பினும் மக்கள் அதற்கு முழுவதுமாக எதிர்ப்பு தெரிவித்தனர் .

greenway
 
இந்நிலையில் தற்பொழுது மத்திய அரசு இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கான மாற்றுப் பாதையை யோசித்த பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும் எனவும்  தெரிவித்துள்ளது.

 நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் நிம்மதி அடைந்துள்ளனர்.