தனியார் பள்ளிகளுக்காக கொசுக்கடியில் விடிய விடிய படுத்திருக்கும் பெற்றோர்கள்! ஆனால் பள்ளிகளின் தற்போதைய நிலை! மக்களே உஷார்!

Government schools awareness


government-schools-awareness

தற்போதைய வாழ்க்கைமுறையில் குழந்தைகளை படிக்கவைப்பது தான் பெரும் சவால் என பொதுமக்கள் கருதுகின்றனர். அதற்கு முக்கிய காரணம் தனியார் பள்ளிகளின் அதிகரிப்பு தான். இலவசமாக கல்வி கற்பிக்கப்படும் அரசு பள்ளியை பொதுமக்கள் கண்டுகொள்வதில்லை.

தான் கூலி வேலை பார்த்தாலும், தன் பிள்ளை தனியார் பள்ளியில் படிக்கவேண்டும் என்றே சாமானிய மக்களும் கருதுகின்றனர். நன்கு தகுதியுடைய ஆசிரியர் ஆசிரியைகள் தான் அரசு பள்ளியில் பணிபுரிகின்றனர் என்பதை சாமானிய மக்களும் புரிந்துகொள்வதில்லை. அதற்கு காரணம் அரசு பள்ளியில் பணிபுரியும் பெரும்பாலான ஆசிரியர், ஆசிரியைகளின் பிள்ளைகளும் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர் என்பதே. இன்றைய காலகட்டத்தில் தனியார் பள்ளிகளில் சீட்டு வாங்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கும் பெற்றோர்கள் தான், எதிர்காலத்தில் அரசு மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் சீட்டு வேண்டும் என காத்திருப்பார்கள்.

Schools

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே தனியார் பள்ளியில் எல்கேஜி சேர்க்கைகாக நேற்று முன்தினம் மாலை முதலே பெற்றோர்கள் பள்ளிக்கு வர தொடங்கிய நிலையில், இரவில் சுமார் 200க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கொசுக்கடியை கூட பொருட்படுத்தாமல் பள்ளியின் வளாகத்திலே காத்திருந்தனர்.

இப்பள்ளியில் எல்கேஜி வகுப்பிற்கு மொத்தம் 80 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், 200க்கும் மேற்ப்பட்ட பெற்றோர்கள் காத்திருந்தனர் என்பது குறிப்படதக்கது. தமிழகத்தில் சில அரசு பள்ளியில் மாணவசேர்க்கை இல்லாமல் பள்ளியை மூடும் நிலை கூட உள்ளது. தற்போது அரசு பள்ளியில், தனியார் பள்ளிகளை விட அதிக வசதிகளை செய்துள்ளது.  எனவே பொதுமக்களிடம் அரசு பள்ளி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தன்னார்வலர்கள் கூறுகின்றனர். தனியார் பள்ளிக்கு செலவிடும் பணத்தை சேமித்து, அரசு பள்ளியில் உங்கள் பிள்ளைகளை படிக்கவைத்தால். நீங்கள் சேமித்து வைத்த பணத்தை உங்கள் பிள்ளைகளின் எதிர்கால உயர்கல்விக்கோ, அல்லது தொழில் செய்யவோ பயன்படுத்தலாம் என தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.