பள்ளி கழிவறையை சுத்தம் செய்யும் அரசு ஆசிரியருக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்.!!

பள்ளி கழிவறையை சுத்தம் செய்யும் அரசு ஆசிரியருக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்.!!


government-school-teacher-toilet-cleaning

அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தான் பணிபுரியும் பள்ளியில் மாணவ மாணவிகள் பயன்படுத்தும் கழிவறையை சுத்தம் செய்யும் புகைப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்த பள்ளியில் ஆசிரியர் சுவாமிநாதன் என்பவர் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

பொதுவாக அரசு பள்ளி ஆசிரியர் என்றால் பள்ளிக்கூடத்திற்கு ஒழுங்காக போவதில்லை. பள்ளிக்கு வந்தாலும் வகுப்புகளுக்கு சென்று சரியாக பாடம் நடத்துவதில்லை. நடத்தினாலும் மாணவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ பாடம் நடத்துவது தங்களது கடமை என மாணவர்களின் மேல் அக்கறை காட்டாமல் தங்களது பணியினை மெத்தனமாக செய்கிறார்கள் என்று அனைவரிடமும் ஒரு தவறான கருத்து நிலவி வருகிறது. 

ஆனால் ஆசிரியர் சாமிநாதன் இந்த தவறான கருத்து, உண்மையாகவே தவறானதுதான் என்று நிரூபிக்கும் விதமாக தான் பணிபுரியும் அரசு பள்ளியில் காலாண்டு விடுமுறை நாட்களிலும் பள்ளிக்குச் சென்று அங்கு தனது மாணவ-மாணவிகள் பயன்படுத்தும் கழிவறையை சுத்தம் செய்துள்ளார். அவ்வாறு சுத்தம் செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.