தமிழகம் லைப் ஸ்டைல்

தரமற்ற எண்ணையில் உணவு தயாரிப்பு. ரத்தாக்குகிறது KFC நிறுவனத்தின் உரிமம்?

Summary:

Government notice to KFC restaurant

அசைவ உணவுகளில் மிகவும் சுவையான உணவுகளில் ஓன்று சிக்கன். சிக்கன் விரும்பி சாப்பிடாத அசைவ பிரியர்களை காண்பது மிகவும் அரிது. இந்த சிக்கனை பலவிதமாக பொரித்து மிகவும் சுவையுடன் வழங்கி வருகிறது வெளிநாட்டை சார்ந்த KFC என்ற நிறுவனம். சென்னை மட்டும் இல்லாமல் உலகின் அணைத்து நாடுகளிலும் இந்நிறுவனத்தின் கிளைகள் பறந்து விரிந்துள்ளன.

இந்நிலையில், பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் அபராதம் கட்டத் தவறிய கே.எஃப்.சி. நிறுவனத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

தரமற்ற எண்ணையில் உணவு பொருட்கள் தயாரிக்கப்படுவதாக இந்நிறுவனத்தின் மீது குற்றம் சாட்ட பட்டது. குற்றம் உறுதி செய்யப்பட்டதால் இந்திய மதிப்பில் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் கட்ட 2015  ஆம் ஆண்டு இந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை அபராதத் தொகை கட்டாத காரணத்தால் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அபராதத்தை செலுத்தாமல் தொடர்ந்து நடத்தினால் உரிமம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டு குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினர். 


Advertisement