தமிழகம்

விபூதி பாக்கெட்டில் மறைத்து கடத்திய 270 கிராம் தங்கம்! அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண்!

Summary:

gold seized in trichy airport

வெளிநாட்டிலிருந்து தமிழகத்தின் திருச்சி விமான நிலையத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை விபூதி பாக்கெட்டில் மறைத்து வைத்து கடத்தி வந்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து நேற்று இரவு திருச்சி வந்த ஏர் ஏசியா விமான பயணிகளிடம் விமானநிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

gold-seized-at-trichy-airport

அவர்கள் நடத்திய சோதனையில் திருப்பூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் தனது கைப்பையில் இருந்த விபூதி பாக்கெட்டில் 270 கிராம் எடை கொண்ட 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலி மற்றும் இரண்டு தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்துள்ளார்.

இதனையடுத்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டு ஜெயலட்சுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Advertisement