தீபாவளி சமயத்தில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! வாயடைத்துப்போன இல்லத்தரசிகள்.!

தீபாவளி சமயத்தில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! வாயடைத்துப்போன இல்லத்தரசிகள்.!


gold rate increased

சமீப காலமாகவே தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ரூ 4525 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 உயர்ந்து ரூபாய் 36200 என விற்பனையாகி வருகிறது.

 அதேபோல் ஒரு கிராம் வெள்ளி விலை 20 காசு உயர்ந்து, 69.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.69,100 என விற்பனையாகி வருகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 25 ரூபாயும், சவரன் ஒன்றுக்கு 200 ரூபாயும் உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.