தமிழகம் வர்த்தகம்

வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை.! சோகத்தில் இல்லத்தரசிகள்!

Summary:

gold rate increased

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் இந்தியாவில் பல கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டுள்ளது. தற்போது நீண்ட நாட்களாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பொருளாதாரம் சரிந்துள்ளது. ஆனால் இந்த நிலையிலும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.592 உயர்ந்து, ரூ.39,824-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 1,608 ரூபாய் உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.74 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,978-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 66,900 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலை கிலோ ரூ.70,800-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.70.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Advertisement