JustIN: ரூ.12 ஆயிரத்தை கடந்தது ஒரு கிராம் தங்கம்.. வெள்ளி விலையும் உயர்வு.. நகைப்பிரியர்களுக்கு பேரிடி.! 



Gold Price Surges Past ₹12,000 Per Gram in Chennai; Silver Rates Also Soar Heavy Shock for Buyers

சென்னையில் சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.720 அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

தங்கம் மீதான முதலீட்டாளர்களின் ஈர்ப்பு காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் தங்கம் விலை ரூ.97,000 வரை சென்று பின் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது. வெள்ளியின் விலையும் ரூ.1,97,000 வரை கிலோவுக்கு உயர்ந்திருந்த நிலையில் குறைந்து தற்போது அதிரடியாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

உச்சத்தில் தங்கம் & வெள்ளி விலை:

கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.12,000 வரை குறைந்து பின் உயர்ந்து வரும் வெள்ளி விலை, நேற்று ஒரே நாளில் ரூ.9,000 வரை உயர்ந்து பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது. தங்கம் மீதான முதலீடு, உலகளாவிய பிரச்சனை, அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித எதிர்பார்ப்பு போன்ற பல காரணங்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீதான விலையை உயர்த்தி வருகிறது. அதே நேரத்தில் தொழிற்சாலைகள் அதிக வெள்ளி பொருட்களை வாங்கி குவிப்பதாலும், சீனா தங்கத்தின் மீதான இறக்குமதியை அதிகரித்துள்ளதாலும் சர்வதேச அளவில் தங்கம் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது. 

இதையும் படிங்க: நகைப்பிரியர்களுக்கு பேரிடி.. புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி.. ரூ.90,000ஐ நெருங்குகிறது.!

தங்கம் விலை இன்று

தங்கம் விலை இன்று (Gold Rate Today In Chennai):

இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் சவரன் தங்கம் ரூ.720 உயர்ந்து ரூ.96,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிராம் தங்கம் ரூ.90 உயர்ந்து ரூ.12,070-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையை பொறுத்தமட்டில் ரூ.4,000 உயர்ந்து ரூ.1,96,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: தாறு மாறாக உயரும் தங்கம் விலை! ஒரு சவரன் 95 ஆயிரத்தை கடந்தது! இன்றைய தங்கம் விலை நிலவரம்...