ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் விபத்தில் மரணம்! சோகத்தில் குடும்பத்தினர்! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் விபத்தில் மரணம்! சோகத்தில் குடும்பத்தினர்!

 


ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த சென்னையை சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவர் நேற்று நடந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 

சென்னை ஷெனாய் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீச்சல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். இதன்பின்னர் கடந்த சில ஆண்டுகளாக நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன்அமெரிக்காவில் பணிபுரிந்து பணிபுரிந்து வந்துள்ளார்.

நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் க்கான பட முடிவு

இந்தநிலையில் பாலகிருஷ்ணன் சில நாட்களுக்கு முன் விடுமுறையில் அவரது சொந்த ஊரான சென்னைக்கு வந்துள்ளார். இவர் நேற்று அவரது உறவினர் ஒருவரை பார்த்து விட்டு தோழியுடன் அரும்பாக்கம் வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஜல்லிக்கலவை ஏற்றி வந்த லாரியை முந்த முயன்றபோது திடீரென நிலைதடுமாறி லாரிக்கு அடியில் விழுந்தார்.

இதனால் லாரியின் சக்கரத்தில் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பாலகிருஷ்ணன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சென்னை அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  விளையாட்டு வீரர் பாலகிருஷ்ணன்  பரிதாபமகா விபத்தில் இறந்ததால் அவருடைய உறவினர்கள் ஆழ்ந்த சோகத்தில்  உள்ளனர். 


Advertisement


ServiceTree


TamilSpark Logo