அம்மா, அப்பா ரொம்ப கஷ்டப்படுறாங்க! ஆனால் நான்.. இளம்பெண் செய்த அதிர்ச்சி காரியம்! சிக்கிய கண்கலங்க வைக்கும் கடிதம்!



girl-suicide-for-not-writing-exam-well

சென்னை திருவொற்றியூர் ரயில்நிலையம் சாலையில் வசித்து வருபவர் சாமுவேல்.அவர் குடிநீர் வாரியத்தில் எழுத்தாளராக வேலை செய்து வருகிறார்.இவரது மகள் கீர்த்தனா. 18 வயது நிறைந்த இவர் மணலி சேலையூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.

 இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கீர்த்தனா கல்லூரியில் தேர்வு எழுதி முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர் தனது அறைக்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இந்நிலையில் சந்தேகமடைந்த பெற்றோர்கள் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் கீர்த்தனா கதவை திறக்கவில்லை. இதனால் பதற்றமடைந்த கீர்த்தனாவின் பெற்றோர்கள் உடனே கதவை உடைத்து பார்த்துள்ளனர். அங்கு கீர்த்தனா தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். அதனை கண்டு அவர்கள் கதறி துடித்துள்ளனர்.

suicide

இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்ட அவர்கள் கீர்த்தனாவின் அறையை சோதனை செய்தபோது கடிதமொன்று சிக்கியுள்ளது.

அதில் கீர்த்தனா,  எனது அம்மா மற்றும் அப்பா இருவரும் மிகவும் கஷ்டப்பட்டு என்னை படிக்க வைக்கிறார்கள். ஆனால் நான் தேர்வு சரியாக எழுதவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவிற்கு யாரும் காரணமில்லை என உருக்கமாக எழுதி வைத்துள்ளார்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.