ஆர்வமாக சீரியல் பார்த்துக்கொண்டிருந்த பெண்.! வீட்டில் தீ பிடித்தது தெரியாமல் உயிரை விட்ட சோகம்.!girl-dead-struggling-with-fire

மதுரை காமராஜர்புரம் அண்ணா மேலத்தெருவில் வசித்து வந்தவர் லட்சுமி. 43 வயது நிறைந்த இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகின்றார்.இவருக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் விவாகரத்து வழக்கு நடந்து வருவதால் அவர்களது அப்பாவிடம் இருந்துள்ளனர். இந்நிலையில் லட்சுமி லேமினேசன் கடையில் பணியாற்றி வந்துள்ளார். லட்சுமி வீட்டில் டிவி இல்லை. அதனால் அவர்  வேலை முடிந்து வந்ததும் மாலை பக்கத்துவீட்டில் சீரியல் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

 இந்நிலையில் நேற்றும் அவர் வழக்கம் போல் பக்கத்துக்கு வீட்டிற்கு சென்று அங்கு டிவி பார்த்துக்கொண்டிருந்துள்ளார். அப்பொழுது இவரது வீட்டிலிருந்து புகைவந்துள்ளது. அதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் லட்சுமியிடம் சென்று அதுகுறித்து கூறியுள்ளனர்.

fire accident

இதில் பதறியடித்து லட்சுமி வீட்டிற்குள் ஓடியுள்ளார். அங்கு கதவைத் திறந்து உள்ளே சென்றதும் அவர் புகை மூட்டத்தில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார். பின்பு தீயணைப்பு படையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள்ளே சென்று பார்த்தபோது லட்சுமி உடல் கருகி, பரிதாபமாக இறந்துகிடந்துள்ளார்.

அதனை தொடர்ந்து அவர்கள் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இச்ச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.