தமிழகம்

காதல்கணவன் செய்த காரியத்தால், குழந்தையை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய இளம்பெண்! வெளியான அதிர்ச்சி சம்பவம்!

Summary:

Girl commit suicide with child for family issue

காட்டுமன்னார்கோவில் அருகே ம.கொளக்குடி பகுதியில் வசித்து வந்தவர் பாலமுருகன்.27 வயது நிறைந்த இவர் அப்பகுதியில் செயல்பட்டுவரும் சுய உதவி குழுவில் தவணைத் தொகையை வசூல் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரியங்கா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு தற்போது மீனலோட்க்ஷினிஎன்ற ஒரு வயது  குழந்தை உள்ளது.

இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் பாலகுமாரின் மகளுக்கு இன்னும் இரு தினங்களில் முதல் பிறந்தநாள் வரவுள்ளது. அதனால் பிறந்தநாளுக்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டுமென பிரியங்கா பாலகுமாரிடம் கூறியுள்ளார். ஆனால் அதனை அவர் பொருட்படுத்தவே இல்லை. மேலும் தொடர்ந்து போனில் பல பெண்களுடன் பேசிக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மனமுடைந்த பிரியங்கா, பாலமுருகன் வீட்டை விட்டு வெளியே சென்றதும்,  தனது குழந்தையின் கழுத்தில் சேலையை கட்டி தூக்கில் தொங்கவிட்டு கொன்றுவிட்ட,  தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது வீட்டிற்கு வந்த பக்கத்து வீட்டுக்காரர் பிரியங்கா மற்றும் குழந்தை தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 அதனைத் தொடர்ந்து இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement