மாஸ்க் போடலைனா அபராதமா? ரோட்டில் ரகளை செய்த பெண்ணுக்கு இப்படியொரு சோகமா?? திகைத்துபோன போலீசார்கள்!!

மாஸ்க் போடலைனா அபராதமா? ரோட்டில் ரகளை செய்த பெண்ணுக்கு இப்படியொரு சோகமா?? திகைத்துபோன போலீசார்கள்!!



Girl affected by bibolar disorder disease

கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சையில் புதிய பேருந்து நிலையம் அருகில் போலீசார்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, பெண் ஒருவர் மாஸ்க் போடாமல் வந்த நிலையில் போலீசார்கள் 200 ரூபாய் அபராதம் கட்ட கூறியுள்ளனர். அதற்கு அந்தப் பெண் அபராதம் கட்ட முடியாது எனக் கூறி காவல் துறையினரையும், மாவட்ட ஆட்சியரையும் தரக்குறைவாக பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெருமளவில் வைரலானது.மேலும் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடைபெற்றது.

அதில், அவர் தஞ்சை மனோஜிபட்டி மாரியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் பன்னீர்செல்வம் என்பவரது மகள் சியாக்கி என்கிற நந்தினி என்பது தெரியவந்தது.மேலும் அவர், பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு சென்னையில் சில காலம் வேலை பார்த்துள்ளார்.இந்த நிலையில் அவர் தற்போது பைபோலார் டிஸ்ஆர்டர் என்கிற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாராம். அதற்கான ஆவணங்களை அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளனராம்.

girl

மேலும் அந்த பெண் 3 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கபட்டுள்ளார். அவருக்கு கொரோனா பற்றி எதுவும் தெரியாது. மாஸ்க் ஏன் போட வேண்டும் சானிடைசர் ஏன் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் தெரியாது. அவர் காவல் துறையினரையும், மாவட்ட ஆட்சியரையும் தரக்குறைவாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என அப்பெண்ணின் சகோதரர் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டுள்ளாராம். இந்த நிலையில் போலீசார்கள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்துப் போய் உள்ளனராம்.