மாலைக்கண் நோயுள்ள இளம் பெண்ணை பலாத்காரம் செய்த கயவன்: அடையாளம் காட்ட முடியாமல் தவிக்கும் சோகம்..!

மாலைக்கண் நோயுள்ள இளம் பெண்ணை பலாத்காரம் செய்த கயவன்: அடையாளம் காட்ட முடியாமல் தவிக்கும் சோகம்..!


Gayavan raped a young woman with maali eye disease

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகேள்ள வசிஷ்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அந்த இளம்பெண் (25). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதே கிராமத்தில் உள்ள காட்டு பகுதியில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்றுள்ளார். அந்த நேரத்தில் அந்த பகுதிக்கு வந்த இளைஞர் ஒருவர் அந்த இளம் பெண்ணின் வாயில் துணியை திணித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த இளைஞர் அத்ற்கு மறுநாளும் அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்று பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண்ணுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பம் அடைந்துள்ளதை கண்டறிந்தனர். மணமாகத இளம் பெண் கர்ப்பம் அடைந்ததால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார், இது குறித்து விசாரித்த போது நடந்த விவரத்தை தெரிவித்தார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மருத்துவமனை நிர்வாகம் புகார் அளித்தது. புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்த பெண் தனக்கு மாலைக்கண்நோய் இருப்பதால் தன்னை பலாத்காரம் செய்த இளைஞர் குறித்து தனக்கு எதும் தெரியாது என்று கூறியுள்ளார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இளம்பெண்ணை பலாத்காரம் செய்த நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.