கஞ்சாவிற்கு அடிமையான காதலன்.... காதலை மறுத்த காதலி.... கழுத்து அறுத்து கொலை செய்த கொடூரம்...!!



Ganja addict boyfriend....Girlfriend who refused love....He killed by slitting throat...

கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் இருக்கும் ராதாபுரம் கிராமத்தில் வசித்து வரும் சுகன் என்பவரது மகள் தரணி (19). தரணி விழுப்புரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார்.

இந்த நிலையில் தரணி அவரது வீட்டுத்தோட்டத்தில் இருந்தபோது, அங்கு மறைந்திருந்த இளைஞர் ஒருவர் தரணியைப் பின்பக்கமாகப் பிடித்து அவரது கழுத்தை அறுத்துவிட்டுத் தப்பியோடி உள்ளார். இதில் தரணி அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

தரணியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது தரணி ரத்தவெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தரணியின் உடலை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில், கணேஷ் என்ற 25 வயது இளைஞரை தரணி காதலித்து வந்ததாகவும், கணேஷ் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானதால், தரணி அவருடன்பழகுவதை  குறைத்துக் கொண்டுள்ளார்.‌இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை எழுந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தரணியின் கழுத்தை அறுத்து கணேஷ் கொலை செய்துள்ளார். 

இந்நிலையில் காவல்துறையினர் தரணியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணேஷை இரண்டு மணிநேரத்தில் கைது செய்தனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.