ரேஷன் அரிசி கடத்திய 132 பேர் மீது குண்டர் சட்டம்... உணவு பொருள் வழங்கல் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்...!

ரேஷன் அரிசி கடத்திய 132 பேர் மீது குண்டர் சட்டம்... உணவு பொருள் வழங்கல் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்...!



Gangster Act against 132 people who smuggled ration rice... Food Supply Department Secretary Radhakrishnan...

தமிழகத்தில் இதுவரை 13 ஆயிரம் வழக்குகள் ரேஷன் அரிசி கடத்தியதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் துறை முதன்மை செயலர் டாக்டர் ராதா கிருஷ்ணன் கூறினார். 

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று திருப்பரங்குன்றத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

முதலமைச்சர் ரேஷன் கடைகளை புதுப்பிக்க கூறியுள்ளார். மொத்தம் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. அதில் 25 ஆயிரம் நிரந்தர கடைகளும்,10 ஆயிரம் கடைகள் பகுதிநேரமாகவும் செயல்பட்டு வருகிறது. ஜூன் மாதத்தில் இருந்து நம்ம ஊரு நம்ம ரேஷன் கடை திட்டத்தின் கீழ் ஜூன் இதுவரை 4 ஆயிரத்து 845 கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்திய 132 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 13 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரேஷன் குடோனிலும் கண்காணிப்புகேமரா பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 5 ஆயிரம் கேமரா வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுகிறது. பொங்கலுக்குகூட நல்ல அரிசி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் குற்றச்சாட்டு வந்தால் உரிய பொருளை திரும்பி அனுப்புங்கள் என்றும், அதிகாரிகளுக்கு தரமான நல்ல அரிசி வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. என்று அவர் கூறினார்.