13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
திருமண பத்திரிக்கை வைப்பது போல் வீட்டிற்குள்ளே புகுந்த கும்பல்... பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்.!
மோகனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் பத்திரிகை கொடுப்பது போல் சென்று கொள்ளையடித்து வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒரு நபர் மருந்து விற்பனை பிரதிநிதியாக சென்று வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வார். அதனை தொடர்ந்து மற்றொரு நபர் சரக்கு டெலிவரி பாய் போல் நடித்து மீண்டும் அதனை உறுதி செய்து கொள்வார்.
அதன்பின் வீட்டில் தனிமையில் பெண் மட்டும் இருக்கும் சமயம் பார்த்து வீட்டிற்கு பத்திரிக்கை வைப்பது போல் நடித்து வீட்டிற்குள் புகுந்த அந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த நூதன கொள்ளையில் ஈடுபட்டு வந்த, மோகனூரைச் சேர்ந்த வெங்கடாசலம் (32), சரண்குமார் (30), ஓவியம் பாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ் (32) ஆகிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.