"தோசை வாங்க போனது தப்பா... " சமையல் மாஸ்டருடன் தகராறு.!! பழ வியாபாரி படுகொலை.!!



fruit-merchant-stabbed-to-death-argument-ends-in-traged

தேனி அருகே கொத்து புரோட்டாவால் ஏற்பட்ட தகராறில் பழ வியாபாரி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை சேர்ந்தவர் சந்தனகுமார். இவருக்கு திருமணமாகி பாண்டியம்மாள் என்ற மனைவியும் 5 வயது மகளும் உள்ளனர். மேலும் இவரது மனைவி தற்போது 6 மாத கர்ப்பினியாக இருக்கிறார். இவர் தேவதானபட்டியின் பிரதான சாலையில் பழக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 8ம் தேதி தோசை வாங்குவதற்காக அருகில் உள்ள ஓட்டலுக்கு சென்றிருக்கிறார் சந்தனகுமார்.

tamilnadu

அந்த ஹோட்டலில் இவரது தெருவை சேர்ந்த சிவா(25) என்பவர் சமையல் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். சந்தனகுமார் தோசைக்கு பார்சல் சொல்லிவிட்டு காத்திருந்துள்ளார். அப்போது சிவா கொத்து பரோட்டா தயார் செய்து கொண்டிருந்திருக்கிறார். கொத்து புரோட்டாவை கல்லில் போட்டு கொத்தியதால் அதிகமான சத்தம் வந்திருக்கிறது. இதனால் எரிச்சலடைந்த சந்தனகுமார் மெதுவாக செய்யச் சொல்லியிருக்கிறார். இதனால் சந்தனகுமார் மற்றும் சிவாயிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: போதையில் தந்தைக்கு அடி... தடுக்க வந்த அண்ணன் படுகொலை.!! குடிகார தம்பி கைது.!!

அப்போது கோபமடைந்த சந்தனகுமார் அருகிலிருந்த விறகு கட்டையால் சிவாவின் தலையில் தாக்கியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சிவா கையில் கிடைத்த கத்தியை எடுத்து சந்தனகுமாரை பலமுறை குத்தியிருக்கிறார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சந்தனகுமாரை அருகிலிருந்தவர்கள் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சந்தனகுமார் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சந்தனகுமாரை தாக்கிய சிவாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிவாவிற்கு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: "விடாமல் துரத்திய கள்ளக்காதல்..." கழுத்தை நெரித்து கணவன் கொலை.!! மனைவி, காதலன் வெறி செயல்.!!