தமிழகம் Covid-19

இலவச முககவசம் வழங்கும் திட்டம்! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

Summary:

free mask in tamilnadu

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முககவசம் அணியவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன், தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக தரமான மறு பயன்பாட்டு முககவசங்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்தநிலையில் நேற்று முதல் விலையில்லா முகக் கவசங்கள் வழங்கப்படுகின்ற திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள 2.08 கோடி குடும்ப அட்டைதாரர்களின் 6.74 கோடி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2 தரமான மறு பயன்பாட்டு முககவசங்கள் ரேஷன் கடைகளின் மூலம் வழங்கும் வகையில், முதல் கட்டமாக பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில், சென்னை மாநகராட்சி தவிர்த்து மீதமுள்ள குடும்பங்களுக்கு விலையில்லா முககவசம் வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் காணொளி மூலமாக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.  


Advertisement