முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை லுங்கியுடன் தூக்கிச்சென்ற போலீஸ்.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை லுங்கியுடன் தூக்கிச்சென்ற போலீஸ்.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!



former minister jayakumar arrested

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின்போது சில இடங்களில் சர்ச்சை சம்பவங்கள் நடைபெற்றன. பெருநகர சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட 49-வது வார்டு பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் கள்ளஓட்டு போடுவதாக, அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது.

அப்போது  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் குறிப்பிட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று திமுக ஆதரவாளரை தாக்கி, அரைநிர்வாணத்துடன் சட்டையை அகற்றி நிற்க வைத்தனர். மேலும் அவரை ஊர்வலமாக அழைத்து சென்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் தனது முகநூல் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்திருந்தார்.

இந்த விஷயம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஜெயக்குமார் மற்றும் 40 பேர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், தமிழ்நாடு பொதுச்சொத்து சேதம் விளைவித்தல், பயங்கர ஆயுதங்கள் கொண்டு காயம் ஏற்படுத்தும் நடவடிக்கை உள்பட 15 சட்டப்பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். 

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அவரது இல்லத்தில் வைத்து போலீசார் நேற்று இரவு 8 மணியளவில் கைது செய்தனர். அவரை கைது செய்ய அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் அவரை, லுங்கியுடன் போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர். இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.