அரசியல் தமிழகம் இந்தியா

தேர்தல் நேரத்தில் மரணமடைந்த முன்னாள் திமுக எம்பி! சோகத்தில் மூழ்கிய அரசியல் வட்டாரங்கள்!

Summary:

former DMK MP died


திமுகவின் சார்பில் இந்திய பாராளுமன்றத்தின் மேல் சபையான ராஜ்ய சபாவில் தமிழகத்தின் பிரதிநிதியாக தோ்ந்தெடுக்கப்பட்டு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ம் ஆண்டு வரை எம்பியாக பணியாற்றிய வசந்தி ஸ்டான்லி நேற்றிரவு காலமானார். வசந்தி ஸ்டான்லி பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

56 வயதான வசந்தி ஸ்டான்லி உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக செயலாற்றியவர். தேர்தல் நேரத்தில் இவரது இறப்பு திமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ராயப்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.


Advertisement