திருமணத்திற்கு 15 நாட்கள் முன் ரூ.700 க்கு புடவை வாங்கிய இளம்பெண்..! இறுதியில் வங்கிக் கணக்கில் காத்திருந்த அதிர்ச்சி... பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் ஆஃபரில் நேர்ந்த விபரீதம்..!!!
பிளிப்கார்ட்டில் ரூ.700க்கு புடவை வாங்கிய இளம்பெண் ஒருவரிடம், பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறி சைபர் மோசடி கும்பல் ரூ.99,000க்கும் மேல் பறித்துள்ளது. இன்னும் 20 நாட்களில் அவருக்குத் திருமணம் நடைபெற உள்ள நிலையில், குடும்பத்தினர் திருமணச் செலவுகளுக்காகச் சேமித்து வைத்திருந்த பணம் பறிபோயுள்ளது. ஆன்லைன் பொருட்களைத் திருப்பி அனுப்பும்போது வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
ரூ.700 புடவையைத் திருப்பி அனுப்பிய இளம்பெண்
பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் தள்ளுபடி விற்பனையின்போது, திருமணத்திற்காக இளம்பெண் ஒருவர் ரூ.700க்கு புடவை ஆர்டர் செய்துள்ளார். சுமார் 15 நாட்களுக்கு முன்பு வாங்கிய அந்தப் புடவை கிடைத்ததும், அதில் திருப்தி இல்லாததால் அதைத் திருப்பி அனுப்பி பணத்தைப் பெற முயன்றுள்ளார். இதற்காக நிறுவனத்தின் ரிட்டர்ன் நடைமுறையைப் பின்பற்றியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சற்று முன்... தீபாவளி பரிசு தொகை..! வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு..! அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!!!
வாடிக்கையாளர் சேவை மையம் போலப் பேசி மோசடி
இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட மோசடி கும்பல், பிளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் போலப் பேசி இளம்பெண்ணைத் தொடர்புகொண்டுள்ளது. பணத்தைத் திருப்பித் தருவதாக நம்ப வைத்த அவர்கள், தாங்கள் கூறிய வழிமுறைகளைப் பின்பற்றச் செய்துள்ளனர். இதை நம்பிய அந்தப் பெண், ஐந்து தவணைகளாக மொத்தம் ரூ.99,000க்கும் அதிகமான தொகையை டிஜிட்டல் முறையில் மாற்றியுள்ளார். பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.
திருமணச் செலவுக்காகச் சேமித்த பணம் பறிபோனது
இன்னும் 20 நாட்களில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், குடும்பத்தினர் ஜவுளி மற்றும் திருமணத் தேவைகளுக்காகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த பணம் பறிபோயுள்ளது. இதனால் அந்தக் குடும்பம் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. ரூ.700 மதிப்புள்ள பொருளுக்கான பணத்தைத் திரும்பப் பெற முயன்றபோது, அதைவிடப் பல மடங்கு தொகையை இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைனில் பொருளைத் திருப்பி அனுப்பிய பிறகு பணத்தைப் பெறுவதற்காக யாராவது தொலைபேசியில் தொடர்புகொண்டால், அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் வங்கிப் பரிவர்த்தனை செய்யக் கூடாது. ரீஃபண்ட் பெறுவதற்காகப் பணத்தை வேறு கணக்கிற்கு அனுப்பச் சொல்வது அல்லது ரகசிய வங்கி விவரங்களைக் கேட்பது மோசடிக்கான அறிகுறியாக இருக்கலாம். சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனை நடந்தால் உடனடியாக வங்கியையும் சைபர் குற்ற உதவி எண் 1930-ஐயும் தொடர்புகொள்வது அவசியம்.