தமிழகம் Covid-19

கொரோனாவால் தமிழகத்தில் பலியான முதல் நபர்.. அவருக்கு கொரோனா பரவியது எப்படி?

Summary:

First death of tn due to corono

மதுரையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மதுரை அண்ணாநகரை சேர்ந்த 54 வயதான நபர் உயிரிழந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு, சர்க்கரை நோய் போன்றவை இருந்துள்ளன.

தமிழகத்தில் முதல் முறையாக பலியான இந்த நபர் வெளி மாநிலங்களுக்கோ நாடுகளுக்கோ செல்லாதவர். நிச்சயம் அவருக்கு அவர் வசிக்கும் பகுதியில் இருந்து தான் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கும் என நம்பப்படுகிறது.

கட்டிட காண்ட்ராக்டரான அந்த நபர் அந்த பகுதியில் உள்ள மசூதி ஒன்றின் நிர்வாகியாகவும் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்தை சேர்ந்த 8 பேர் மதுரையில் உள்ள பல்வேறு மசூதிகளுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளனர். அவர்கள் இந்த நபர் செல்லும் மசூதிக்கும் வந்துள்ளனர்.

அவர்கள் பலியான அந்த நபர் தான் கவனித்துள்ளார். எனவே அந்த ஞ பேரில் ஒருவருக்கு கொரோனா இருந்திருக்கலாம் அவரிடம் இருந்து இந்த நபருக்கு பரவியிருக்கலாம் என எண்ணப்படுகிறு. இதனைத் தொடர்ந்து அந்த நபர் வசித்த பகுதியில் 30 வீடுகள் மற்றும் அவரை சந்தித்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


Advertisement