தமிழகம் Covid-19

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் புதிதாக 43 பேருக்கு கொரோனா!

Summary:

First corono positive at Pudukottai

இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்முறையாக ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் 17 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று புதிதாக 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்தம் 1520 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 18 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களாக புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகியவை இருந்து வந்தன. ஆனால் தற்போது புதுக்கேட்டையில் புதிதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Advertisement