சரவெடி அதிரடி.. தீபாவளி அன்று இந்த நேரத்தில்தான் பட்டாசு வெடிக்க வேண்டுமாம்.. ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன காவல்துறை..!

சரவெடி அதிரடி.. தீபாவளி அன்று இந்த நேரத்தில்தான் பட்டாசு வெடிக்க வேண்டுமாம்.. ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன காவல்துறை..!



Fireworks action.. Firecrackers should be burst at this time on Diwali.. Police said to be strict..!

தீபத்திருநாளாம் தீபாவளியை கொண்டாட மக்கள் அனைவரும் தயாராகிக் கொண்டு வருகின்றனர்.  வாழ்க்கையின் இருளை நீக்கி ஒளியை கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது அக்கம் பக்கத்து வீட்டார்களுக்கு இனிப்புகள் கொடுத்து பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது வழக்கம்.

மேலும் தீபாவளியன்று பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பது குறித்து பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும், தொடர்ந்து இரவு 7:00 மணி முதல் 8:00மணி வரையிலும் பட்டாசு வெடிக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது.

Fireworks action

மேலும் எளிதில் பற்றக் கூடிய பொருட்களை விட்டு தொலைவில் பட்டாசுகளை வெடிக்குமாறும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியின் படி 125 டெசிபல் அளவுக்கு மேல் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை  வெடிக்க வேண்டாமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.