கஞ்சா கடத்தியவரைப் பிடிக்க சினிமாவை மிஞ்சிய சம்பவம்.! உயிரை பணயம் வைத்து பிடித்த போலீஸ்.!

கஞ்சா கடத்தியவரைப் பிடிக்க சினிமாவை மிஞ்சிய சம்பவம்.! உயிரை பணயம் வைத்து பிடித்த போலீஸ்.!


Favorite policeman who smuggled cannabis

கஞ்சா கடத்தியவரை பிடிக்க, அவரது காரில் தொங்கியபடி சினிமாவில் போல விரட்டிச் சென்ற தனிப்படை காவலர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் காரில் கஞ்சா கடத்தி செல்வதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நேற்று தனிப்படை போலீஸார், மன்னார்புரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஒரு காரை தனிப்படை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால்அவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அந்த காரை போலீசார் இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றனர். திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் செந்தண்ணீர்புரம் அருகே கார் படுவேகமாக சென்று கொண்டு இருந்தது. அப்போது சினிமாவில் போல தனிப்படை போலீஸ் ஏட்டு சரவணன் இருசக்கர வாகனத்தில் இருந்து காரின் மீது ஏறி குதித்து பேனட்டை பிடித்துக் கொண்டார். ஆனாலும் அந்த நபர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். 

அப்போது தலைமை காவலர் சரவணன் அவரை காரை நிறுத்தும்படி எச்சரித்தார். ஆனாலும் அவர் நிறுத்தவில்லை. அப்போது, சரவணனின் ஒருகால் தரையில் உரசியபடி சென்றதால், அவருக்கு பலத்த காயம்ஏற்பட்டது. ஆனாலும் அந்த நபர் கண்டுகொள்ளாமல் காரை வேகமாக ஓட்டினார். சுமார் 2 கி.மீ தூரத்துக்குப் பிறகு, சஞ்சீவி நகர் சந்திப்பு பகுதியில் டிராபிக் ஜாம் ஏற்பட்டதால் கார் மெதுவாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. 

அப்போது தனிப்படை போலீஸார், காரின் பக்கவாட்டு ஜன்னலுக்குள் கையைவிட்டு, சாமர்த்தியமாக காரை நிறுத்தினர். இதில் சரவணன் தூக்கி வீசப்பட்டார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் துரத்தி வந்த தனிப்படை போலீசார் காரை ஓட்டி வந்த நபரை மடக்கி பிடித்தனர். பின்னர் கீழே விழுந்ததில் காயம் அடைந்த தலைமை காவலர்  சரவணனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

police

இதனையடுத்து காரை ஓட்டி வந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர், புதுக்கோட்டை மாவட்டம் ஆவூரை சேர்ந்த முகமது அனீபா (வயது 48) என்பதும், காரில் 21 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது அனீபாவை கைது செய்தனர். மேலும் கடத்தி செல்லப்பட்ட 21 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.