அதிரடி லுக்கில் இறங்கிய பாடகி கெனிஷா பிரான்சிஸ்! இணையத்தில் வைரலாகும் புதிய ஆல்பம் !
மகளை காதலித்து ஏமாற்றிய காதலனை சரமாரியாக வெட்டிய தந்தை! முகநூலால் ஏற்பட்ட விபரீதம்!

சென்னை அம்பத்தூரில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வந்தவர் சத்யபிரியா. இவருக்கு முகநூலில் லாரன்ஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.இதனையடுத்து இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்தாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சத்யபிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லாரன்ஸிடம் கேட்டுள்ளார். அனல் லாரன்ஸ் திருமணத்திற்கு மறுத்ததாக தெரிகிறது. இதுபற்றிய விஷயம் சத்யபிரியாவின் அப்பாவிற்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த சத்யபிரியாவின் தந்தை லாரன்ஸை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார்.
சத்யபிரியாவின் தந்தை அரிவாளால் வெட்டியதில் ரத்தவெள்ளத்தில் சரிந்தார் லாரன்ஸ். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் லாரன்ஸை மீட்டு சென்னை கே.எம்.சி மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சத்யபிரியா தந்தையை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பேஸ்புக் மூலமாக பழகி தன் மகளை ஏமாற்றியதாக சத்யபிரியா தந்தை புகார் தெரிவித்தார்.