இப்படி சொல்ல அந்த தந்தைக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ தெரில!! குழந்தையை வளர்க்க விருப்பம் இல்லாமல் தந்தை செய்த காரியம்..

இப்படி சொல்ல அந்த தந்தைக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ தெரில!! குழந்தையை வளர்க்க விருப்பம் இல்லாமல் தந்தை செய்த காரியம்..


Father handover his daughter to hospital staffs

பெற்ற  குழந்தையை வளர்க்க விருப்பம் இல்லாமல் தந்தையே  தனது குழந்தையை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள எருமைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவியின் பெயர் சுபாஷினி. இவர்கள் இருவருக்கும் 6 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் ஆனந்தகுமார் சுபாஷினி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் 6 மாத பெண் குழந்தை விருப்பம் இல்லாமல் தந்தையான ஆனந்தகுமார் வளர்த்து வந்துள்ளார்.

விருப்பம் இல்லாமல் வளர்ந்து வந்த நிலையில் அக்குழந்தையை உருவினர் ஒருவரின் உதவியுடன் சிவகங்கையில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு சென்று காரில் நாங்கள் வரும்போது சாலையில் இந்த குழந்தை அழுதுகொண்டிருந்தது என்று கூறி குழந்தையை மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளார். இக்குழந்தை தொடர்பாக மருத்துவகல்லூரியிலிருந்து குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் ஆனந்தகுமார் மற்றும் உறவினரிடம் விசாரணை மேற்கொண்டதில் அந்த குழந்தை ஆனந்தகுமார் குழந்தை என உறுதியானது. மனைவியை பிரிந்து குழந்தையுடன் வாழும் ஆனந்தகுமார் குழந்தையை வளர்க்க விருப்பம் இல்லாமல் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தால் யாருவது வளர்த்து கொள்ளவார்கள் என நினைத்து இப்படி செய்தேன் என கூறியுள்ளார். மேலும் போலீஸ் அதிகாரிகள் பொய்யான காரணம் கூறி அரசு மருத்துவமனையில் ஒப்படைத்ததால் ஆனந்தகுமார் மற்றும் உறவினர் ஒருவரை கைது செய்தனர்.