தாயை இழந்து வாழ்ந்து வந்த 13 வயது சிறுமி! குடிப்பழக்கத்தால் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை!

சென்னை, ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் அச்சக ஊழியராகப் வேலைபார்த்து வந்துள்ளார், இவருக்கு திருமணமாகி 13 வயதில் ஒரு மகள் இருக்கின்றார். ஆனால் இவரது மகளுக்கு ஒன்றரை வயது இருக்கும்போதே இவரின் மனைவி இறந்து விட்டார். இந்தநிலையில் மூர்த்தி, மகள் மற்றும் அந்த சிறுமியின் பாட்டி ஆகிய மூவரும் வசித்துவந்துள்ளனர்.
இந்தநிலையில் மதுவுக்கு அடிமையான மூர்த்தி, நாள்தோறும் வீட்டுக்குக் குடித்துவிட்டு வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த வாரம் வழக்கம்போல் வீட்டுக்குக் குடித்து விட்டுச் சென்ற மூர்த்தி, நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த தன்னுடைய மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் பகலிலும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த மூர்த்தி இரண்டு தினங்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக சிறுமியை அறைக்குள் அழைத்துச் சென்று கத்தியைக் காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமி அலறல் சத்தம் போட்டுள்ளார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து வீட்டுக்குள் சென்று சிறுமியை மீட்டனர். இதனையடுத்து தனக்கு நடந்த கொடுமைகளை சிறுமி தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பாட்டி காவல நிலையத்தில் மூர்த்தி மீது புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார், மூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.